நான் இருப்பதோ சென்னையில் அவள் இருப்பது திருச்சி. மாதம் ஒருமுறை பார்த்துக் கொள்வதே பெரிய விஷயமாக இருந்தது. சிறு சிறு சண்டைகள் அதிகமாக வரும் நான் எவ்வளவுதான் அவனைத் திட்டினாலும் அவள் கோபப்படமாட்டால் சண்டை போட்டுக் கொண்டு அவளை மறுபடியும் வந்து என்னிடம் பேசுவாள்.காதலர்கள் போல கைகோர்த்துச் செல்ல பயப்படுவாள்.சிறுபிள்ளை போல Road cross பண்ண தெரியாது.பிரியாணியில் வெறும் ரைஸ் மட்டும் சாப்பிடுவாள் சிக்கன் பீஸ் எல்லாம் அப்படியே இருக்கும்.பீசா கார்னர் கூட்டிக்கொண்டு போக செய்வாள் ஆனால் அங்கு எதுவும் அளவாக விரும்பி சாப்பிட மாட்டாள்.என்ன பெண் என்றே புரிவதில்லை அவள் எப்பவுமே அடுத்தவங்களுக்கு ஆக வாழும் பெண் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
காலங்கள் உருண்டோடின எனக்கு அவளிடம் பிடிக்காதது என்னவென்றால், அடுத்தவர்கள் சொல் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னிடம் சண்டையிடுவாள். காதலர்கள் நடுவில்லோ அல்லது கணவன் மனைவி நடுவிலோ மூன்றாம் நபர் யாரும் வரக்கூடாது.என்னிடமும் நிறைய குறைகளும் உண்டு தவறுகளும் அதிகம் செய்திருக்கிறேன். எங்களுக்குள் சிறு விரிசல்கள் பெரிய அளவில் சண்டையாக மாறியது அனைத்திற்கும் சண்டை போடுவோம்.நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக பேசியதைவிட சண்டை போட்ட நாட்கள் தான் அதிகம். என்னை விட்டு நீங்க சென்ற அவளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன.நான் எங்கே சென்றாலும் பழைய நினைவுகள் என்னைத்துரத்திக் கொண்டே தான் இருக்கும்.என்றும் நீங்காத வலியவள் என் நெஞ்சில். முதல் காதலை மறப்பது கடினம் மறந்தாலும் வாழ்வது கடினம். உங்களுடைய முதல் காதல் அனுபவம் இருந்தால் கீழே கமென்ட் செய்யுங்கள்.
No comments:
Post a Comment