Monday, 20 April 2020

வாழ்வில் கடனை அடைக்க சிறந்த வழி முறைகள்....

என் பெயர் ஆனந்தன்.என் சொந்த ஊர் திருச்சி.நான் தற்போது சென்னையில் ஒரு டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறேன்.எனக்கு சிறுவயதில் இருந்து சொந்தமாக தொழில் செய்வது மட்டுமே ஆர்வம் உண்டு,ஒருவருக்கு அடிமையாக வேலை செய்வதில் எனக்கு துளிகூட விருப்பம் இல்லை.எனவே எனது பெற்றோர்கள் எவ்வளவு எதிர்த்தும் தொழில்தான் செய்து வருகிறேன்.எங்கள் தொழிலில் நன்றாக நடந்து  வருகிறது. அதில் முக்கியமான ஒன்று ஆள் பற்றாக்குறை அவ்வப்போது ஆள் பற்றாக்குறை இருந்தாலும் எப்படியாவது நான் சமாளித்து கொள்வேன்.எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தனியாகவும் என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை. பேன்சி ஸ்டோர்,ஸ்டுடியோ,  ஜெராக்ஸ் கடை இதுபோன்ற கடைகள் எல்லாம் 9 மணிக்கு மேல் திறந்தால் போதும், ஆனால் டீக்கடையில் அதிகாலை நாலு மணிக்கு திறந்து இரவு பத்தரை வரை நடத்திய ஆக வேண்டும்.நாங்கள் ரெகுலராக கம்பெனிக்கு டீ சப்ளை செய்து வந்தோம்.அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டும் வந்துள்ளேன்.எனவே நான் எதையும் சிக்கனமாக செலவு செய்ய மாட்டேன் நல்ல தாராளமாக செலவு செய்து வந்துள்ளேன்.

 எங்கள் வீட்டில் எனக்கு ஆதரவு இல்லாததால்
என் நண்பனிடம் கடன் வாங்கித்தான் தொழில் செய்து வந்தோன்.இதனால்  எனக்கு நாலு லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. லாபம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது அந்த கடனை அடைக்காமல் வட்டியும் சரியாக செலுத்தாமல் வீண்செலவு நிறைவாகவே செய்து வந்தேன்.தேவையற்ற இடங்களில் பல செலவுகள் செய்வேன்.உதாரணத்திற்கு என் கடையில் இருக்கும் டைனிங் டேபிள் கூட 12,000 போட்டு வாங்கினேன்.ஆனால் அதே டைனிங் டேபிள் பிளாஸ்டிக்  வாங்கினால் வெறும் 1000 1500 அவ்வளவுதான் வரும்.இதுபோன்ற தேவையற்ற செலவு நிறைய செய்வோன். இது போன்ற நிறைய செலவு செய்ததால் என்னால் கடனை அடைக்க முடியவில்லை கடை திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். என் கடையில் வேலை செய்யும் பயனும் அடிக்கடி லீவு போட்டு கொண்டிருந்தான்.ஆகையால் ஒரு சில தினங்களில் அவன் வேலைக்கு வருவதையே நிறுத்திவிட்டான்.வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி ஏறி என்னால் கட்ட முடியவில்லை.ஆரம்ப காலத்தில் கடினமாக உழைத்து முன்னேற்றம் என் கடையை போகப்போக சலித்துக் கொண்டு அவ்வப்போது கடையை மூடி மூடித் திறந்தேன்.

 வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தவர்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இருந்தாலும் பெரிதாக கவலைப்படவில்லை.எனக்கு ஒரு காரணம் என்னவென்றால் ஆள் பற்றாக்குறை தான் என்னால் மட்டும் தனியாக எப்படி சமாளிக்க முடியும் என்று என்னிடம் நான் பேசிக்கொண்டிருப்பேன்.இதுபோன்ற கடையை அடிக்கடி மூடி மூடி திறந்ததால் கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்து வந்தால் அவர்களுக்கு டீ சரியாக கிடைக்காததால் கம்பெனி ஆர்டரை ரத்து செய்தனர்.என்னால் மேலும் கடைகளுக்கு வாடகைக்கு,கரண்ட் பில் செலுத்தி பால் காசு கொடுத்து என்னால் நடத்த முடியவில்லை.பொருள் வாங்குவது கூட காசு இல்லை.அந்த சூழ்நிலையில் நான் தள்ளப்பட்டேன்.இது போதாதென்று இந்த காலகட்டத்தில் தான் கொரோன  நம் நாட்டை தாக்கியது.ஆகையால் 144 உத்தரவின் பெயரில் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிய இருக்க வேண்டும். என்று அரசு உத்தரவு ஒரு பக்கம் கடன் சுமை ஒரு பக்கம் கடைக்கு வாடகை கொடுக்க வேண்டும் இன்னொரு பக்கம் கரண்ட் பில் செலுத்த வேண்டும் அது மட்டுமின்றி நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கூட வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். என்ன வாழ்க்கை என்று பேசாம செத்து போய் விடலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

 விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் என்னால் தாங்க முடியாமல் ஊருக்கு வந்தேன்.அதைப்பற்றிய சிந்தனை எனக்கு தோன்றியது நான் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டேன் என்று புலம்பி தள்ளிக் கொண்டே இருந்தேன்.என்னால்  எந்த காரியத்தையும் மேலும் கவனம் செலுத்த முடியவில்லை கவனம் சிதறி கொண்டே இருந்தது.எனக்கு அவ்வப்போது டைரி  ஏதோ எழுதும் பழக்கம் இருந்து கொண்டே இருந்தது.

 அன்று இரவில்  நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும்போது மேரி கோல்ட் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அனைத்தும் பிஸ்கட்டும் காலியானது. கடைசியில் இரண்டு பிஸ்கட் மட்டும் இருந்தது அதில் ஒன்றை சாப்பிட்டு விட்டு இன்னொன்றை என் டைரி மீது வைத்துவிட்டு சில நேரங்களுக்குப் பிறகு சில எறும்புகள் அதை கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கத் தொடங்கியது. நான் சிறிது கேவலமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.இவ்வளவு பெரிய பிஸ்கட்டை எறும்பு  எப்படி  தூக்கிக்கொண்டே போகப்போகிறது எதற்கு இவ்வளவு பெரிய பிஸ்கட்டுகள் மீது அதை ஆசைப்படுகின்றனர்.அதன் எடையை விட பிஸ்கட்டின் விட ஆயிரம் மடங்கு அதிகம் என்று கூட கூறலாம். அன்று இரவு அப்படியே யோசித்துக்கொண்டே உறங்கினேன் என் கனவில் கூட என் வாழ்க்கையில் சோதனைகள் பற்றியே ஓடிக்கொண்டிருந்தது.காலையில் விழுந்தது இணைந்து முகம் கழுவிவிட்டு சற்று என்று எதோ நோட் செய்து வைக்கலாம் என்று டைரியை தேடினேன்.


 கடைசியில் பார்த்தால் இரவு எறும்பு ஏறிக்கொண்டிருந்த பிஸ்கட்டில் முக்கால்வாசியை எரும்பு கரைத்துக்கொண்டு போய்விட்டது.  ஒரே இரவில் எறும்பின் கடின உழைப்பால் அதன் எடையை விட ஆயிரம் மடங்கு இருக்கும் பிஸ்கட்டை அரித்து எடுத்து சென்றுவிட்டனர்.அதுவும் இப்போது அதனை அனைத்தும் சாப்பிட முடியாது அது எதிர்காலத்துக்கு தான் சேமித்து வைத்திருக்கும் ஆனால் மழை பெய்து எறும்பு  புதுக்குள்  தண்ணீர் புகுந்து விட்டால் சேமித்து வைத்த அனைத்து உணவுப் பண்டங்களும் வீணாகிவிடும். இது எறும்புகள் தெரியும் இருந்தாலும் அதன் மூலம் சேமிப்போம் எப்போதும் நிறுத்தவில்லை எனவே என் எதிர்காலம் கருதி நான் வருத்தப்படுவதை விட என் என் உழைப்பும் உழைப்பினால் வரும் பணத்தையும் சேமித்து வைத்தால் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும் என கருதினேன் விடிவுகாலம் பெறுவதற்காக தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறேன்.நன்றி. 


உங்களையும் யாராவது ஏன் பெரிதாக ஆசை படுகிறாய் என்று கேட்டால் உங்களை நீங்களே இரும்பாக நினைத்துக்கொள்ளுங்கள் வாழ்வில் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள் வாழ்த்துக்கள்

Monday, 6 April 2020

காட்டுக்குள் கறி சோறு.......

வாழ்க்கையில் சில தருணங்களை மறக்க முடியாது.அது போல தான் நம் சிறுவயதில் செய்த கூட்டாஞ்சோறு யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது.ஒரு தொட்டியில் அரிசியை ஊற வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சாப்பாடு செய்து அதுக்கேத்த மாதிரி குழம்பு வகைகள் செய்து அதில் செய்து வர ருசியோ தனி.காலங்கள் மாறினாலும் வேகங்கள் கூடினாலும் அதற்கேற்ற படி நாம் கொண்டு ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம்.அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற சம்பவங்களை நாம் திரும்பிப் பார்த்தால் நம் குழந்தைப் பருவம் ஞாபகம் வந்து கொண்டுப்போகும். 


 வயது கூடினாலும் ஒரு பதினெட்டு இருபது வயதில் காலேஜ் படிக்கும்போது கூட வெட்டியாக  இப்போது மலை பகுதிகளில் சமைத்த நயனங்கள் இன்னும் பல. அதற்கு பிறகு யாரை கூட்பிட்டாலும் நேரம் இல்லை என்று உதாசீனப்படுத்தி விடுவார்கள். மொபைல் போன் நோண்டும் நேரத்தில் கூட நண்பர்களிடம் பேச சுற்றி திரிய யாருக்கும் போதிய நேரம் இல்லை. சிக்கன் கிரேவிவுடன் சப்பாத்தி, சாதம், பொறித்த மீன், முட்டை அப்படியே கையில் ஓரு பீர். ஆலமரத்துக்கு அடியிலோ அல்லது காட்டுகுளோ இயற்கையோட இயற்கையாக சரக்கு அடிப்பதே தனி சுகம். அது இப்பொழுது 5000 ரூபாய் கொடுத்து ஏசி அடித்தாலும் அந்த அழமரத்துக்கு அடித்த மனம் திருப்தி இல்லை. 


ஒரு கட்டத்தில் கோரோனோ virus நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஆரோக்கியதை  விட்டு சென்ற நம்பை மீண்டும் இங்கையே இணைத்து விட்டது. 

என் முதல் காதல் அனுபவம்

என் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. நாங்கள் இருவரும் facebook இல் தான் முதன் முதலாய் பேசிக்கொண்டோம். நான் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்கும் போது fake id  என்று நினைத்து தான் கொடுத்தேன்.அது ஒரு நிஜமாகவே பெண்ணாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இருவரும் நட்பை ஆழமாக வளர்த்துக் கொண்டு இருந்தோம். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. 

 நான் இருப்பதோ சென்னையில் அவள் இருப்பது திருச்சி. மாதம் ஒருமுறை பார்த்துக் கொள்வதே பெரிய விஷயமாக இருந்தது. சிறு சிறு சண்டைகள் அதிகமாக வரும் நான் எவ்வளவுதான் அவனைத் திட்டினாலும் அவள் கோபப்படமாட்டால்  சண்டை போட்டுக் கொண்டு அவளை மறுபடியும் வந்து என்னிடம் பேசுவாள்.காதலர்கள் போல கைகோர்த்துச் செல்ல பயப்படுவாள்.சிறுபிள்ளை போல Road cross பண்ண தெரியாது.பிரியாணியில் வெறும் ரைஸ் மட்டும் சாப்பிடுவாள் சிக்கன் பீஸ் எல்லாம் அப்படியே இருக்கும்.பீசா கார்னர் கூட்டிக்கொண்டு போக செய்வாள் ஆனால் அங்கு எதுவும் அளவாக விரும்பி சாப்பிட மாட்டாள்.என்ன பெண் என்றே புரிவதில்லை அவள்  எப்பவுமே அடுத்தவங்களுக்கு ஆக வாழும் பெண் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். 

 காலங்கள் உருண்டோடின எனக்கு அவளிடம் பிடிக்காதது என்னவென்றால், அடுத்தவர்கள் சொல் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னிடம் சண்டையிடுவாள். காதலர்கள் நடுவில்லோ அல்லது கணவன் மனைவி நடுவிலோ  மூன்றாம் நபர்  யாரும் வரக்கூடாது.என்னிடமும் நிறைய குறைகளும் உண்டு தவறுகளும் அதிகம் செய்திருக்கிறேன். எங்களுக்குள் சிறு விரிசல்கள் பெரிய அளவில் சண்டையாக மாறியது அனைத்திற்கும் சண்டை போடுவோம்.நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக பேசியதைவிட சண்டை போட்ட நாட்கள் தான் அதிகம். என்னை விட்டு நீங்க சென்ற அவளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன.நான் எங்கே சென்றாலும் பழைய நினைவுகள் என்னைத்துரத்திக் கொண்டே தான் இருக்கும்.என்றும் நீங்காத வலியவள்  என் நெஞ்சில். முதல் காதலை மறப்பது கடினம் மறந்தாலும் வாழ்வது கடினம். உங்களுடைய முதல் காதல் அனுபவம் இருந்தால் கீழே கமென்ட் செய்யுங்கள்.